ஐஸ் க்யூப்ஸ்

From Santhosh Narayanan's அஞ்ஞானச் சிறுகதைகள்
”சொல்லாமல் மறைத்த காதலின் நினைவுகள் எல்லாம் சப் கான்ஷியஸ் மைண்டின் அடி ஆழத்தில் தண்ணீர் மாதிரி தேங்கி விடும். வாழ்க்கை முழுக்க உள்ளே தழும்பிக்கிட்டே தொந்தரவு செய்யும். அந்த தண்ணீரை ஐஸ் க்யூப்களாக மாற்றி, சேமிக்கப்போறோம். அது தான் இந்த ப்ரோஜக்டின் திட்டம்.

மனித குலத்திற்கே இது ஒரு வரப்பிரசாதம்” என்றான் மைண்ட் எஞ்ஜினியரீங் துறையின் ஆராய்ச்சியாளன் இந்திரன். கலைந்த முடி உறக்கமில்லாத கண்களுடன் சிரித்தான்.

தன் வெளிறிய லேபின் நூற்றுக்கணக்கான ஃப்ரீசர்களில் இருக்கும் ஐஸ்க்யூப்களை பழைய யுனிவெர்சிடி நண்பர்களுக்கு காட்டி கொண்டிருந்தான். ஒவ்வொரு ஃப்ரீசரும் பெயர் எழுதப்பட்டு சீல் செய்யப்பட்டிருந்தது. எல்லாரும் ஆச்சரியத்தில் வாய் பிளந்து நின்றனர்.

“எதுக்கு சேமிக்கணும்” என்றாள் சவுமியா, அதே பழைய துடுக்குடன். இந்திரன் புன்னகைத்தான்.

சட்டென்று அருகிலிருந்த ஃப்ரீசரிலிருந்து ஐஸ் க்யூப் உருகி ஒரு கோடாக கீழிறங்கி சவுமியாவின் பாதங்கள் வழியாக மேலே ஏற ஆரம்பித்த்து. அந்த ஃப்ரீசரின் மீது எழுதி இருந்த பெயரை கவனித்தாள். இந்திரன்.

Trends

Vibgy | Live

Popular