காதலிக்கும்போது எப்டியோ தெரியாது ஆனால் அதை வெளிப்படுத்தும்போது மட்டும் "அம்பி" ஆகிவிடுகிறோம். அம்பி மாதிரி கோமாளித்தனமாவாவது காதலை சொல்லணும். அதுவும் இல்லேனா எப்பிடி? உங்கள் மனைவி ஆகட்டும் காதலி ஆகட்டும் நீங்கள் அவளை காதலிக்கிரீர்கள் என்று அவளுக்கு தெரியாமலே இருந்துவிடப்போகிறது. அதனால் ரெமோ மாதிரி குலுக்கிவிட்ட பீர் பாட்டில் போல காதலை வெளிக்காட்டுங்கள்.
அதிகமா செலவில்லாத நிறைய "ரெமோ" ஐடியாக்கள் இருக்கு. உங்கள் பீட்பாக் மற்றும் நீங்கள் புதுமையாக முயற்சி செய்து அதற்கு பரிசாக பூரி செய்து போட்டிருந்தாலும் சரி பூரி கட்டயால ரெண்டு போட்டிருந்தாலும் சரி கமெண்டில் பகிரவும்.
- முதல்ல நாம நம்மள லவ் பண்ணனும். நம்பளையே நாம லவ் பண்ணாம அடுத்தவங்கள எப்படி பண்ணுவோம்? தவிர, நாமளே நம்பள லவ் பண்ணாம அடுத்தவங்க நம்பள லவ் பண்ணனும்னு எதிர்பாக்க முடியாதுல?
- தினமும் காலையில் (பல் தேச்சுட்டா நல்லது) உங்கள் துணைவியை "இறுக அணைச்சு ஒரு உம்மா தரணும்"
- வீட்டை விட்டு கிளம்பும் போது "ஐ லவ் யூ" னு மென்மையா சொல்லணும்.
- உங்களுக்காக செய்யும் வேலைக்கு அவளை பாராட்டியே தீரவேண்டும்.
- "ஓ! உன்கருத்து அப்படியா?" னு புன்னகையுடன் அவள் கருத்தை ரசியுங்கள். "உளறாதே! எனக்கு எல்லாம் தெரியும்" னு வெடிக்கறது அநாகரிகம்.
- திடீர் திடீர் னு முத்தம் கொடுக்க வேண்டும். (ஒரே வீட்டில் இருந்தாலும் கூட) அப்பப்போ லவ் லெட்டர் குடுக்கவேண்டும்.
- இப்போலாம் "போக்கே" பாஷன். அந்த காலத்திலெல்லாம் மல்லிகை பூ அல்வா வாங்கி குடுக்கர்த்து வழக்கம்.
- அவளுடைய நண்பர்களையும் உறவினர்களையும் மரியாதையுடன் நடத்த வேண்டும்.
- அவள் ஏதேனும் சிறு தவறு செய்தால் உடனே மன்னிக்க வேண்டும். மணிக்கணக்கில் முஞ்சியை தூக்கிவசுண்டு இருக்கரதுக்கு பேர் லவ் இல்ல.
- அவள் "அப்செட்" ஆகறதுக்கு நீங்கள் காரணமாக இருந்தால், உடனே மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்புனா சும்மா "சாரி" னு சொல்லிடு போய்டகூடாது. ஐ காண்டக்டோட அவள் கையை புடிச்சுண்டு மன்னிப்பு கேக்கணும், அவள் முகத்துல புன்சிரிப்பு வரவரைக்கும்.
- அப்பப்போ எங்கயாவது நடந்து போகும்போது அவள் விரல்களை கொர்த்துக்கணும்.
- எப்போவாவது எதுக்காவது அவள் கண்ணீர் விட நேர்ந்தால், 'இடிச்ச புளி' மாதிரி உக்காண்டு இருக்காம அவளை மார்பில் சாய்த்துக்கொள்ள வேண்டும். கண்ணீர் சேகரிப்பு திட்டம்.
- அப்பப்போ அவள் குஜால் ஆகராப்ல எதையாவது பண்ணிண்டே இருக்கணும்.
- அவளுடைய வேலைகளில் அவளுக்கு வாலண்டரியா உதவணும்.
- அவள் மேலான உங்கள் காதலை அவளுக்கு பூரிப்பு வராப்புல 'பப்ளிகுட்டி' பண்ணனும். கள்ள காதல்-ல இது சாத்தியம் இல்லை. நல்ல காதல்-னா பப்ளிக்குட்டி பண்ணலாமே!
- பொறுமையாகவும் அக்கறையுடனும் அருகில் அமர்ந்து அவளது பயத்தை போக்குங்கள்.
- உங்கள் தகராறுகளை பெட் ரூமுக்கு கொண்டு செல்லாமல், மன அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் பெட் ரூமுக்கு போங்கள். முகத்தை திருப்பிக்கொண்டு படுத்துக்கொள்ளாதீர்கள்.
- பிரார்த்தனை செய்யும்போது அவளுக்காக முதலில் வேண்டிக்கொள்ளுங்கள்.
- அவள் கேட்ட அளவு காதலை அவளுக்கு தருக. அவளும் நீங்கள் எதிர்பார்த்த அளவு காதலை தருவாள்.