காதல் - ஒரு சிலிர்ப்பு!

நல்வணக்கம்.

உள்டப்பாவில் என்னை தொடர்பு கொண்ட அனைவருக்கும் எனது நன்றிகள். பலர் தங்கள் குடும்பங்களில் நடக்கும் சிறு சிறு சண்டைகள் ஏற்படுத்தும் பெரிய பெரிய பாதிப்புகளை எப்படி கையாள்வது என்றெல்லாம் யோசனை சொல்லுமாறு கேட்டிருந்தனர். அவர்களுக்கு மட்டுமல்ல உங்கள் அனைவருக்காகவும் இதோ...

காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் என்று "எதோ காதல் அத்துடன் முடிந்தது" என்பது போல சொல்கிறோம். காதல், கல்யாணத்திற்கு பிறகும் கண்டின்யூ ஆகவேண்டும்.

உங்கள் மனைவிக்கோ கணவருக்கோ சிறு சிறு குறைகள் இருப்பது உண்மைதான். அதனால் தான் அவர் / அவள் உங்கள் கணவனாக / மனைவியாக இருக்கிறார். இல்லையெனில் யார் கண்டார், உங்களைவிட வேறு நல்ல துணை கிடைத்திருக்க கூடும்.

சினிமாவிற்கு கூட்டி செல்கிறேன் என்ற கணவர் ஆபீஸிலிருந்து லேட்டாக வந்தால் ஆபீஸ்-ல் ஏதும் முக்யமான வேலை திடீரென்று வந்திருக்கும். காரணத்தை கேட்காமல் பொரிந்து தள்ளினால், அவருக்கு அவமானமும் கோபமும் தான் வரும். சினிமாவிற்கு போகாதால் குடிமுழுகி விடப்போவதில்லை. ஆனால் அதற்காக சண்டை போட்டால் குடிமுழுகிவிடும்.

லேடாக கணவன் வரும்போது மனைவி பரிமாறவில்லை என்றால், அவளுக்கு தலைவலி இருக்கலாம். (தலை வலியை கூட சொல்லாத மனைவிகள் உண்டு!) அதற்காக அவள் கணவனை வெறுக்க ஆரமித்து விட்டாள் என்றா அர்த்தம்?

இல்லறம் இருவர் சம்பந்தப்பட்டது. ஒருவரது செயல் இருவரையும் பாதிக்கும். புரிந்து கொண்டு பயணிக்கவும். காதலிக்கும்போது ஆயிரமுறை "ஐ லவ் யூ" சொல்பவர், கல்யாணத்திற்கு பிறகு ஒருமுறை கூட சொல்லவில்லை என்றால் எப்படி?

பாவம்! காதல் அந்து அவலா போகாம என்ன செய்யும்?

Trends

Vibgy | Live

Popular