காதல் - ஒரு மின் சக்தி!

தன்னை உயிருக்கு உயிராக நேசிக்கும் ஒருவர் / ஒருத்தி இவ்வுலகில் இருக்கிறார் /
இருக்கிறாள் என்று தெரிந்தால் அடிமனதிலுள்ள மகிழ்ச்சி சுனாமி போல பொங்குகிறது. உடலில் ஒரு மின்சக்தி பாய்கிறது. அவரோடு / அவளோடு சேர்ந்து வாழ்கையை புத்தம் புதிதாய் எதிர்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. பார்பவர்கிளிடமெல்லாம் தன் பற்றி சொல்லவேண்டும் என்று துடிக்கிறது.

காதல் வயப்பட்டால் மட்டும் போதாது. அதை உரியவரிடம் முறையாக வெளிப்படுத்த வேண்டும்.

ஜான் அதிகம் படித்தவரில்லை. ரொம்ப ரிசர்வடு. கடும் உழைப்பின் மூலம் முன்னுக்கு வந்தவர். இப்போது ஒரு பண்ணைக்கு சொந்தக்காரர். எளிமையான நல்ல மனிதர்.

அதே ஊரில் வெயிட்டராக பணியாற்றினார் லூயிஸ் என்ற பெண். அந்த ஹோட்டலில் தான் ஜான் தினமும் காபி குடிக்க போவார். லூயிஸ் தான் அவருக்கு எப்போதும் காபி கொடுப்பாள். ஜானுக்கு காபி பிடித்திருந்தது. ஜான் தான் அதிகம் பேசும் டைப் இல்லையே தவிர லூயிஸ் நன்றாக பேசுவாள்.

லேசான புன்னகையுடன் அவளையே பார்த்துகொண்டு அவ்வபோது தலையாட்டுவதொடு சரி. பிறகு, "சரி! நேரமாகிறது. வருகிறேன்" என்று கிளம்பி விடுவார்.

நாட்கள் உருண்டோடின. ஒருநாள் வழக்கம்பொல ஜான் வந்தார். லூயிஸ் சாண்ட்வெஜா காபி தான என்று கேட்க. அதெல்லாம் இருக்கட்டும் இப்படி வந்து உட்கார் என்றார். அவளும் வந்து உட்கார்தாள். நீ என்னை திருமணம் செய்து கொள்வாயா? என்று கேட்டார். திகைத்து போனாள் .

ஜானை அவளுக்கு பிடிக்கும். ஆனால் காதல் பேச்சு வரும் என்று சற்றும் அவள் எதிர்பார்க்கவில்லை. "இப்படி திடீர்னு கேட்டா எப்பிடி? இரண்டுநாள் டைம் குடுங்கோ "அபிடினாள். "ஸூர். காபி கொண்டுவா" என்றார்.

ஒரே வாரத்தில் அவர்கள் திருமணம் நடந்தது.

வீட்டை விரிவு படுத்தினார் ஜான். ஆணின் அலட்சியத்தால் அலங்கோலமாய் இருந்த வீடு இப்போது புதுகோலம் பூண்டது.

ஒருநாள் லோயிசுக்கு கடுமையான தலைவலி ஏற்ப்பட்டது. தனது டாக்டர் நண்பனை தொடர்பு கொண்டார் ஜான். டாக்டரால் டையகனைஸ் செய்ய முடியவில்லை.

லூயிசிடம் ஜானை பற்றி விசாரித்தார். "ஜான் மிகவும் நல்லவர். எனக்காட எதுவும் செய்வார் " என்றாள். இருந்தும் அவள் பேச்சில் சுரத்தில்லை. மீண்டும் அழுத்தி கேகில், "அவர் அன்பானவராகதான் இருக்கிறார். ஆனால் நான்தான் அவருக்கு ஏற்றவளாய் ஆரோக்யமானவளாய் இல்லை" என்றாள்.

ஆறுமாதங்கள் கழித்து லூயிஸ் கடும் வயிற்று வலியால் துடித்தாள். மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் அவளது அப்பன்டிக்ஸ் வெடித்திருந்தது. ஆபரேஷன் ஏற்பாடுகள் நடந்தன.

அவளுக்கு ஒன்றும் ஆகாதே? என்று ஜான், டாக்டர் காலை பிடித்துகொண்டு அழுதார். ஜான் அழுது அவர் அதுவரை பார்த்ததே இல்லை.

ஆனால் ஆபரேஷன் முடிந்தும் அவள் உடல்நிலை கவலைக்கிடமாகத்தான் இருந்தது. "நான் வலிமாயானவளாய் இல்லை. அவருக்கு நான் ஏற்றவள் இல்லை. அவருக்கு நான் தேவயில்லை." என்று ஏதேதோ புலம்பிகொண்டிருந்தாள். "இல்லை. ஜானுக்கு நீ தேவை" என்றார் டாக்டர். நம்பிக்கை இல்லாதவளாய் கண்களை மூடிக்கொண்டாள்.

ஜான் தண்ணீர் கூட குடிக்காமல் காத்துக்கிடந்தார். "ஜான்! அவள் உடல் நிலை தேறுவதற்கு அவளுக்கே விருப்பமில்லை என படுகிறது. நிறைய ரத்தம் இசந்திருக்கிறாள்." என்றார் டாக்டர். "எவ்வளவு வேண்டுமோ என் உடம்பிலிருந்து எடுத்துகொள்ளுங்கள்" என்றார் ஜான்.

நீங்கள் லோயிசை அவ்வளவு காதலிக்கிரீர்களா என்றார் டாக்டர். என்ன கேள்வி டாக்டர். இல்லை என்றால் அவளை நான் மணந்துகொண்டிருபேனா? எண்டார் ஜான். என்றாவது ஒருநாள் இதை அவளிடம் சொல்லிருக்கிரீர்களா? என்றார் டாக்டர். அது அவளுக்கே தெரயுமே . அவளுக்கு நான் ஒரு குறையும் வைததில்லையே என்றார் ஜான்.

குரூப்பை டெஸ்ட் செய்துவிட்டு, லூயிசிடம் டாக்டர் சொன்னார், "உன் கணவர் உனக்கு ரத்தம் குடுக்க போகிறார்"

ஜானின் ரத்தம் டியூப் வழியாக லோயிசை அடைந்தது. நடுவில் ஒரு ஸ்க்ரீன்.

"நான் எனது ரத்தம் முழுதும் வேண்டுமானாலும் உனக்காக தருவேன். நீயும் என்னை போல ஸ்ட்ரோங் ஆகபோகிறாய்."

லூயிஸின் நாடி துடிப்பு மெல்ல சீரானது. "ஐ லவ் யூ ஜான்" என்றாள்.

ஐ லவ் யூ லூயிஸ் என்றார்.

ஊசிகள் டியூபுகள் அகற்ரபட்டவுடன், தனது மார்பில் லூயிஸை சைதுகொண்டிருந்தார். லூயிஸின் கை அவரது கையை இருக்க பற்றியிருந்தது. அவளது முகத்தில மலர்ச்சி தெரிந்தது.

லூயிஸ் குணமடைந்து விட்டாள்.

உண்மையில் லூயிஸின் ரத்தமும், ஜானின் ரத்தமும் வேற வேற குருப். ஜானின் ரதம் லூயிசுக்கு செலுத்தபடவில்லை.

ஆனால், கணவனின் ரத்தம் அவள் உடலுக்குள் போகிறது என்ற எண்ணம் அவளுக்கு பரவசத்தை தந்து அவளை உயிர்பித்து விட்டது. "ஐ லவ் யூ" என்று உணர்ச்சிவசப்பட்டு கதறவைத்த ரத்தம் அது.

அவளுக்கு உயிரை மீட்டு தந்தது, ரத்தம் மட்டுமல்ல, அவர் வெளிபடுத்திய உணர்சிகரமான வார்த்தைதான்.

அவ்வளவு சக்தி அந்த வார்த்தைகளுக்கு உண்டு.

முத்தம் குடுக்கும்போது கும்மிருட்டுலேயும் கண்ண முடிக்கறாங்க பா!

Trends

Vibgy | Live

Popular