காதல் - ஒரு தன்னம்பிக்கை!

இருவரில், ஒருவரது காதல் வலிமையானதாக இருந்தால்கூட போதும், அது இருதலை காதலாக மாற்றிவிடும். இதில் பெரும்பாலும் பெண்களுக்கே வலிமை அதிகம்.

இயற்கையிலேயே பெண்களுக்கு இருக்கும் பிடிவாத குணம் இதற்கு துணை புரிகிறது. ஒருவன் மேலுள்ள காதல் அவளை மிகப் பெரிய திட்டங்களை தீட்ட செய்யும்.

ஈகோ, மிடுக்கு மற்றும் ஆண்மைத்தனம் இவையெல்லாம் ஆணுக்கு மிகப்பெரிய தடைகற்கள். அதனால் அவன் காதலில் பிரச்சனை என்றால் சுலபமாக துவண்டுவிடுவான்.

அவள் மனதயும் மூளையையும் சதா சர்வ காலமும் அவனை அடைவதிலேயே செலவிடுவாள். தன் சக்திக்கு மீறி ’ரிஸ்க்’ எடுப்பாள்.

பிருதிவிராஜ் குதிரையில் அத்து மீறி சம்யுக்தையின் சுயம்வரதில் புகுந்தது பெரிய விஷயமில்லை. அனைவரது முன்னிலையில். அவனது குதிரையில் சம்யுக்தை ஏறியதுதான் பெரிய விஷயம். சில நிமிடங்கள். அவள் தயங்கி இருந்திருந்தால்?

நியூயார்க் நகரில் வசித்து வந்த கார்மேன்(பெண்) என்பவரது குடியிருப்புக்கு அருகிலிருக்கும் டிபார்ட்மெண்ட் ஸ்டோரிலிருந்து லூயீஸ் என்வர் தான் டோர் டெலிவரி செய்வார்.

பல நாட்களாக லூயீஸை ரசித்து வந்த கார்மேனுக்கு அவர் மேல் காதல் பூத்தது. லூயீஸ் கடமையே கண்ணாயிருந்தார். பேச்சு கொடுத்து பார்தாள். லூயீஸ் ’மோனோ சிலபிக் ரிப்ளை’ தான் செய்தார்.

பொருத்தது போதுமென பொங்கி எழுந்த கார்மேன், தனது தோழியிடம் ’ஐடியா’ கேட்க.

ஐடியா இதுதான். ஒரு கனமான பொருளை ஆர்டர் செய்து, அதை தூக்கி வந்த கர்டஸிக்கு, லூயீஸுக்கு காஃபி ஜூஸ் கொடுத்து பேச்சு கொடுப்பது.

ஆனால் பணிவாக லூயீஸ் காஃபி குடித்தவுடன் இடத்தை காலி செய்து விட்டார்.

அப்ஸட் ஆன கார்மேனிடம் தோழி சொன்னாள், "அவருக்கு உன்னை பிடித்திருக்கிறது, ஆனால் கொஞ்சம் கூச்ச சுபாவம். அடுத்த முறை கலக்கலாக ஏதும் செயலாம்"

ஒருநாள் எதிர்த வீட்டுக்கு பொருள் டோர் டெலிவரி செய்து திரும்பும் போது, கார்மேன் தனது கீசேயினில் இருந்த குட்டி பொம்மை துப்பாக்கியை காட்டி "உங்கள் காரை கடத்த போகிறேன்" என்றாள். லூயீஸ் சிரித்துக்கொண்டே "தாராளமாக" என்றார் கார் சாவியை நீட்டியபடி. கார்மேன் சற்று அருகில் சென்று "ட்ரைவருடன்" என்றாள்.

ஒரே மாதத்தில் இவர்களது திருமணம் நடந்தது.

மற்ற வெற்றிகளை போலவே காதலிலும் ’ரிஸ்க்’ எடுக்க வேண்டும்.

தோற்றுவிடுவோமோ என்று பயந்து ’ரிஸ்க்’ எடுக்காமல் ’வெறும்’ வாழ்க்கை வாழ்வதை விட ’ரிஸ்க்’ எடுத்து தோற்ப்பது மேல்.

ல்லினாய்ஸை சேர்ந்த ஜேம்சுக்கு ’இன்டெர்னெட்’ காதலும் அதன் அனுபவங்களும் அலாதியானது தான்.

"இன்டெர்னெட்" பைதியமான ஜேம்சுக்கும் ஹிங்காமை சேர்ந்த அலக்ஸாண்ட்ரியாவுக்கும் "தகவல் தொடர்பு" ஏற்பட்டது. இருவருக்கும் ஒரே விஷயங்களில் ரசனை இருக்கவே, இனிமையாகவும், அர்த்தமுடனும் நீண்டநேரம் உரையாட முடிந்தது. அவளது நகைச்சுவை உணர்வும் அவள் மேல் ஒருவித ஈர்ப்பை ஏற்ப்படுதியது. அவளை நேரில் சந்திக்க ஆவல் கொண்டான் ஜேம்சு.

இருவருமே பள்ளி வயதுதான் என்பதால், பாக்கேட் மணியும் குறைவுதான். இந்நிலையில், நியூஸ் பேப்பர் டெலிவரி, கார்டனிங் மூலம் சுமார் 250 டாலர் ஈட்டிக்கொண்டு, "இரண்டு மூன்று நாட்கள் கழித்து தான் வருவேன்" - என்று வீட்டில் எழுதிவைத்துவிட்டு, புரப்பட்டான்.

6 மணி நேர சைக்கிள் பயணத்திற்கு பிறகுதான் இது ஆகிற காரியம் இல்லை என்று உணர்ந்தான். உடனே பஸ் பிடித்து, நியூயார்க் சென்று இன்னொரு பஸ் பிடித்து பாஸ்டன் சென்று, பின்பு 20 மைல் நடந்தான். 48 மணிநேர பயணதிற்கு பிறகு ஹிந்காமை அடைந்தான் .

தனது காதலியை எழுப்பமனமில்லாது அவளது வீட்டிற்கு அருகிலிருக்கும் ப்ளாட் பார்மில் படுத்து தூங்கினான்.

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலிசார் அவனை எழுப்பாமல் அவனது பையை சோதித்து, அவனது தெரிந்துகொண்டு, (ஏற்கனவே மகனை காணவில்லை என பெற்றோர்கள் புகார் கொடுத்திருந்ததால் )அவனை விளக்கம் ஏதும் கேட்காமல் விட்டிற்கு அனுப்பிவைத்தனர்.

இதை எதேச்சையாக அந்தப்பக்கமாக போன படம் பிடிக்க, அடுத்தநாள் அது செய்தியானது. அதை பார்த்த ஜவுளி நிறுவனங்கள் அழகழான ஆடைகளையும், விமான நிறுவனங்கள் டிக்கெட்டுகளையும் கொடுத்தது. இன்னொரு பத்திரிக்கை நிறுவனம் நிதிதிரட்டி கொடுத்தது (அட! காதலியை சந்திக்கத்தான்).

இதை டிவியில் பார்த்த அலெக்ஸாண்ட்ரியா அசந்தே போனாள். ஜேம்ஸ் அளித்த பேட்டியில், எங்களுக்கு திருமணவயது இன்னும் ஆகவில்லை. எங்களுக்கு 21 வயது ஆகும்போது திருமணம் செய்து கொள்வோம் என்றான் தீர்மானமாக.












Trends

Vibgy | Live

Popular