காதல் - ஒரு ஓவியம்

காதல் ப்ரோபோசல்-னாலே கவிதை தான் ஞாபகம் வரும். சினிமாவிலேயும் ஒரு கிரீடிங் கார்டு ரோஜா பூவோட ஹீரோ லவ் ப்ரொபோஸ் பண்ணுவான்.

சரி, ஒரு ஓவியன் என்ன பண்ணுவான்? கவிதை எழுதினா தான் காதல்னா கண்ணதாசன், வாலி, வைர முத்து இவாளெல்லாம் தவிர யாருமே காதல சொல்ல முடியாது.

அந்த ஓவியன் எப்படி அந்த பொண்ணு கிட்ட காதல சொல்றது-னு யோசிச்சுண்டே இருந்தான் ஒருவருஷமா. (வழக்கம் போல) ஒருநாள் அவனுக்கு ஒரு ஐடியா உதிச்சுது.

அந்த பொண்ண நகை கடை விளம்பர மாடல் மாதிரி ரொம்ப அழாக வரஞ்சு அதை சர்ப்ரைஸ்-ஆ அந்த பொண்ண கூப்டு அந்த ஓவியத்துல இருந்த போர்வைய விலக்க அழகான அவள் ஓவியம் இருந்தது. அது கண்டு அந்த பொண்ணு ரொம்ப சந்தோஷமாயிடா. அப்போ அந்த படத்துல இருந்த மொதிரத்த பாத்து "நா மோதிரமே போடறதில்லையே?" னு சொன்னா.

உடனே அந்த ஓவியன், "அது நா உனக்கு போடபோற என்கேஜ்மெண்ட் மோதிரம்" னு சொல்ல அவ சொன்னா, "இதை எப்போ சொல்வேள்னு ஒருவருஷமா காத்துண்டு இருந்தேன்னு."

(வழக்கம் போல இவாளுக்கும்) கல்யாணம் ஆச்சு. சுபம்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்.

Trends

Vibgy | Live

Popular