இல்லறம் நல்லறம்

பொதுவாவே குத்தம் சொல்றது கெட்ட பழக்கம். தன் மனைவி குறையே இல்லாத ஆளா இருக்கணும்னு யார் எதிர்பாக்கர்த்தில்லையோ அவா தான் நல்ல ஆத்துக்காரர். என்ன அம்பி சொல்றே? எங்காத்துக்கு வந்து பாரு, ஒரே அழுக்கு துணியா எங்க கண்டாலும் எறச்சு வச்சுருக்கா. பிரிஜ் முழுக்க பழம்பத்து (ஒருவாரத்துக்கு முந்திய சாம்பார், 2 வாரத்துக்கு முந்திய ரசம்) ரொப்பி வச்சுருக்கா. அதெல்லாம் நான் சொல்லபடாதா?

தாராளமா சொல்லுங்கோ! ஆனா அத கேக்கரவாளே ரசிக்கறாப்ல சொல்லுங்கோ!

லக்ஷ்மிக்கும் அவ அக்காளுக்கும் ஒரு போட்டி. யார் அழகுனு. நாரதர் தான் தீர்ப்பு சொல்லணும். வகையா மாட்டிண்டார். யாரை அழகுனு சொன்னாலும் ஆபத்து தான். அதுனால ரெண்டு பேரையும் ஒரு காட் வாக் பண்ண சொன்னார். லக்ஷ்மிய பாத்து நீ வரும்போது அழகா இருக்க அவ அக்காள பாத்து நீ போகும்போது அழகா இருக்க னு சொன்னார். ஜெய்சது 2 பேரும் இல்ல, நாரதர் தான்.

பொதுவாவே சிறந்த புத்திமதி என்னனா, ரோல் மாடல் ஆ இருக்கறது தான்.

நம்பறதுக்கு கஷ்டமா இருந்தா இந்த விளையாட்டை விளையாடி பாருங்கோ! உங்க கொழந்தேட்ட ஏழு எண்ணும்போது கை தட்டணும்னு சொல்லிட்டு ஆறு எண்ணும்போதே கை தட்டிடுங்கோ. கொழந்தேளும் அப்போவே தட்டிடும். மாரல் என்னனா, நாம சொல்றத விட செய்யறதுக்கு தான் எபக்ட் ஜாஸ்தி.

Trends

Vibgy | Live

Popular